கேதார கௌரி விரதம்




புரட்டாதி வளர்பிறை நவமி தொடக்கம் ஐப்பசி தீபாவளி அமாவாசை வரை இருபத்தொரு நாட்கள் கடைபிடிக்கப்படும். மண்ணினால் செய்யப்பட்ட லிங்கத்தை அம்பாள் பூஜை செய்தது போல் பெண்கள் பூஜை செய்ய வேண்டும்.
இருபத்தொரு இலைகள் கொண்ட நூலில் இருபத்தொரு முடிச்சிட்டு கும்பத்தின் மேல் வைத்து பூஜை செய்ய வேண்டும். 


இருபத்தொரு திதிகள் பூஜை செய்து இருபத்தோராவது திதியான அமாவாசை திதியன்று இரவில் கண்விழித்திருந்து அந்நூலை எடுத்து கட்டிக்கொண்டு மறுநாள் காலை சூர்யோதயதிற்கு முன் நீராடி புனர்பூஜை செய்து அந்நீரை குரு மூலம் மக்கள் அபிஷேகம் செய்து கொள்ளுதல் வேண்டும்.பின் பிரசாதம் பெற்றுக்கொண்டு முதல் நாளில் கட்டிகொள்ளபட்ட ரக்ஷாபன்தனை அவிழ்த்தல் வேண்டும்.


ஐந்து மாதத்திற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத  பெண்களும், மாதவிலக்கு நீங்கப்பெற்ற பெண்களும் இருபத்தொரு நாட்களும் விரதம் இருக்கலாம். மற்றபெங்கள் மாதவிலக்கு அம்முறை வந்த பின் அமாவாசை திதிக்கு முன்னுள்ள ஒன்பது நாட்களோ அல்லது ஏழு  நாட்களோ ,மூன்று நாட்களோ அல்லது அன்றாவதோ இவ்விரதத்தை அனுஷ்டித்து இருபத்தொரு முடிச்சிடபட்ட கயிற்றை இடது புயத்திலோ அல்லது இடது கைகட்டிலோ கட்டிகொள்ளலாம். ஆண்களும் இவ்விரதத்தை பின்பற்றுவது தவறாகாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக