திருக்கார் த்திகை தீபம் இவ்வருடம் 2016 இல் டிசம்பர் மதம் 12 ஆம் திகதி (கார்த்திகை 27 ஆம் நாள்) உலக இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது .
இந்துக்கள் வீட்டில் உள்ள இருள் நீங்க பூஜை அறையில், வாசலில், வீட்டின் சகல இடங்களிலும் விளங்கேற்றி அலங்கரிப்பர். திருவண்ணாமலை அருணாச்சேலேஸ்வர ஆலயத்தில் இந்நிகழ்வு கார்த்திகை பிரம்மோற்சவம் என அழைக்கப்பட்டு பத்து நாட்கள் விழாவாக மிக விசேடமான பூஜை வழிபாடுகளுடன் கொண்டாடப்படும்.
முதலாம் நாள் ( 03/12/2016)
கொடியேற்றத்துடன் தொடங்கும் முதலாம் நாள் த்வஜாரோஹணம் என்று அழைக்கப்படும். காலையும் மலையும் சுவாமி அருணாச்சலேஸ்வரர் வெள்ளி வாகனத்தில் வெளியேஅழைக்கப்பட்டு பூஜைகள் இடம்பெறும். கல்யாண மண்டத்தில் நடைபெரும் தீபாராதனைகளை தொடர்ந்து சுவாமி அருணாச்சலேஸ்வரருடன் , கணபதி, முருகன், சண்டேஸ்வரர் மற்றும் பார்வதிதேவியும் வெவ்வேறு வாகனங்களில் வெளியே அழைக்கப்பட்டு
பூஜைகளும் நடைபெறும்.
இரண்டாம் நாள் ( 04/12/2016)
பஞ்சமூர்த்திகளான சுவாமி அருணாச்சலேஸ்வரர் ,கணபதி, முருகன், சண்டேஸ்வரர் மற்றும் பார்வதிதேவி ஆகியோர் இந்திர விமானத்தில் காட்சியளிப்பார்.
மூன்றாம் நாள் ( 05/12/2016)
பஞ்சமூர்த்திகளான சுவாமி அருணாச்சலேஸ்வரர் ,கணபதி, முருகன், சண்டேஸ்வரர்
மற்றும் பார்வதிதேவி ஆகியோர் சிம்ம வாகனத்தில் காட்சியளிப்பார்.
நான்காம் நாள் ( 06/12/2016)
பஞ்சமூர்த்திகளான சுவாமி அருணாச்சலேஸ்வரர் ,கணபதி, முருகன், சண்டேஸ்வரர்
மற்றும் பார்வதிதேவி ஆகியோர் காமதேனு வாகனத்தில் காட்சியளிப்பார். இன்று இறைவனுக்கு பக்கத்தில் கட்பக விருட்சம் காணப்படும். கட்பக விருட்சமானது சகல வரங்களையும் அருளக்கூடியது என் நம்பப்படுகின்றது.
ஐந்தாம் நாள் ( 07/12/2016)
இன்று சுவாமி அருணாச்சலேஸ்வரர் 25 அடி உயர வெள்ளி ரிஷப வாகனத்தில் 17 அடி ஆலவட்டத்துடன் காட்சியளிப்பார்.
ஆறாம் நாள் ( 08/12/2016)
பஞ்சமூர்த்திகளான சுவாமி அருணாச்சலேஸ்வரர் ,கணபதி, முருகன், சண்டேஸ்வரர்
மற்றும் பார்வதிதேவி ஆகியோர் அழகிய வெள்ளிரதத்தில் அமர்ந்து ஆலயத்தினை சுற்றி வெளிவீதி வருவர்.
எழாம் நாள் ( 09/12/2016)
பஞ்சமூர்த்திகளான சுவாமி அருணாச்சலேஸ்வரர் ,கணபதி, முருகன், சண்டேஸ்வரர்
மற்றும் பார்வதிதேவி ஆகியோர் மரத்திலான மகா ரதத்தில் அமர்ந்து வெளிவீதி வருவர்.
எட்டாம் நாள் ( 10/12/2016)
பஞ்சமூர்த்திகளான சுவாமி அருணாச்சலேஸ்வரர் ,கணபதி, முருகன், சண்டேஸ்வரர்
மற்றும் பார்வதிதேவி ஆகியோர் குதிரை வாகனத்தில் அமர்ந்து வலம் வருவர். குதிரைகளின் கால்கள் நிலத்தில் படாமல் காற்றில் பறப்பது போல் அமைந்திருப்பது விசேட அம்சமாகும்.
ஒன்பதாம் நாள் ( 11/12/2016)
பஞ்சமூர்த்திகளான சுவாமி அருணாச்சலேஸ்வரர் ,கணபதி, முருகன், சண்டேஸ்வரர்
மற்றும் பார்வதிதேவி ஆகியோர் கைலாச வாகனத்தில் அமர்ந்து வலம்
வருவர்.
பத்தாம் நாள் ( 11/12/2016)
கார்த்திகை தீப விலக்கல் இன்று அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகும். இன்று பரணி தீபமும் ஏற்றப்படும். மாலை ஆறு மணி அளவில் மெயின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இது மிக மிக முக்கிய நிகழ்வாகும். சுவாமி அருணாச்சலேஸ்வரர் மலையினும்சசியில் அக்னி வடிவில் தரிசிக்க முடியும் என நம்பப்படுகின்றது. இந்நிகழ்வில் சுவாமி பெரிய நாயகர் தங்கத்திலான ரிஷபவாகனத்தில் அமர்ந்து காட்சியளிப்பது இன்னொரு விசிட அம்சமாகும்.
சுவாமி சந்திரசேகரர் , தேவி பராசக்தி , மற்றும் முருகன் ஆகியோர் ஆலய குளத்தில் தெப்பத்தில் அமர்ந்து வருவர். இது தெப்பம் என அழைக்கப்படும்.
சுவாமி அருணாச்சலேஸ்வரர் மலையை சுற்றி வலம் வந்து மீதும் ஆலயதிட்கு வருவது கிரிவலம் என் விசேட பெயர் கொண்டு அழைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக