கார்த்திகை மாத சிறப்புகள்







  • கார்த்திகை மாதம் தீபம் தானம் செய்வது லட்சுமிகடாட்சம் தரும்.
  • வெண்கலப்பாத்திரம் தானியம் பழம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் சேரும்.
  • கார்த்திகை புராணத்தைக் கேட்டால் நோய் ஏழ்மை அகலும்.
  • கார்த்திகை மாதத்தில் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
  • ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
  • பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.
  • பௌர்ணமிக்குப் பிறகு வரும் சோம வாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
  • திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும்.
  • மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும்.
  • எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.






தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும்.

முற்றத்தில் 4

பின்கட்டில் 4

கோலமிட்ட வாசலில் 5

திண்ணையில் 4

வாசல் நடை,மாடக்குழி, நிலைப்படி, சுவாமி படம் அருகில் தலா 2 விளக்குகள்

சமையல் அறையில் 1

வெளியே எம தீபம் 1

என்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும். வீட்டுவாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது.

கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.


                                               தீபம் ஏற்றும் முறைகள்


 
தீபம் ஏற்ற தூய்மையான அகல் விளக்கு புதியது தான் பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோயில்களில் மறுபடியும் ஏற்றக்கூடாது.

அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

விநாயகப்பெருமானுக்கு  1 அல்லது ஏழு தீபம்
முருகப்பெருமானுக்கு 6 தீபம்
பெருமாளிற்கு 5 தீபம்
நாக அம்மனுக்கு 4 தீபம்
சிவனிற்கு 3 அல்லது 9 தீபம்
அம்மனுக்கு 2 தீபம்
மஹா லஷ்மிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.


தீபங்கள் வாகனங்களுக்கு முன்பாக ஏற்றவேண்டும்.
சிவன் - நந்திக்கு முன்பாகவும்
அம்மன் - சிங்கம் நந்தி முன்பாக
பிள்ளையார் - பெருச்சாளி முன்பாக
பெருமாள் - கருடன் முன்பாக
முருகர் - மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.
துர்க்கை அம்மனுக்கு மட்டும் எலுமிச்சை பழ விளக்கு 2 ஏற்ற வேண்டும்.

தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும்
குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும்
குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக