அட்சய திருதியை

அட்சய திருதியை





வைகாசி மாத சுக்கில பட்ச திருதியின் போது அட்சய திருதியை சைவ மக்களால் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை அதிஷ்டமான அல்லது யோகமான ஒரு பொழுதாக இந்து மக்களால் நம்பப்படுகிறது. அன்றைய பொழுதில் சைவ மக்கள் தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அன்று தங்கம் வாங்கினால் தனம் , பொருள், தங்கம் சேரும் என்பது சைவ மக்களின் நம்பிக்கை. அட்சய திருதியை பற்றி அருமையான கதை ஒன்று உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பரான குசேலர் ஒரு தடவை வறுமையால் வாடினாராம். அப்போது என்ன செய்வதென்று அறியாத குசேலர் தனது நண்பரான  ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஏதாவது பொருள் உதவி கேட்டு வரலாம் என என்னி ஒரு பிடி அவலை தனது மேலாடையில் முடிந்து எடுத்துக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்க சென்றாராம்.

குசேலரை நன்கு உபசரித்த கிருஷ்ணர் அவர் கொண்டு வந்த அவலை  வாயில் போட்டுக்கொண்டு "அட்சயம் உண்டாகட்டும்" என்று வாழ்த்தினாராம். இன்னொரு கவளம் அவலை எடுத்து வாயில் போடப் போகும் போது  லக்ஷ்மி  தேவியின் அம்சமான ருக்மணி தேவி தடுத்தாராம். காரணம் என்னவென  ஸ்ரீ கிருஷ்ணர் வினவ அதற்கு  "அன்புடன் கொடுத்த அவலை  ஒரு பிடி தின்றதற்கே குசேலரின் குடிசை வீட்டை மாட மாளிகையாக்கி சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கி விட்டீர்கள். இனியும் ஒரு பிடி தின்றால் நானே குசேலர் வீட்டுக்கு போய்விட வேண்டியதுதான் " என்றாராம்.

குசேலர் கேட்காமலே அனைத்து செல்வங்களையும் வழங்கியவர் ஸ்ரீ கிருஷ்ணர் .குசேலர் வீடு திரும்பிய உடன்தான் குசேலருக்கு விடயம் தெரிய வருகிறது. குசேலருக்கு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைத்த தினமே அட்சய திருதியை.

அட்சயம் என்றால் பெருகுதல் அல்லது வளருதல் என்று பொருள். இத்தினத்தில் செய்கின்ற காரியம் அட்சய பாத்திரத்தினை போல அள்ள அள்ள குறையாமல் இருப்பது போன்று வெற்றிகரமாக வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது வேத வாக்கு.

இந்நாளில் நாம் செய்ய கூடியவை.

  1.  லட்சுமி குபேர பூஜை செய்ய மிகவும்  சிறப்பான நாள்.
  2. அட்சய திருதி அன்று தங்க வைர நகைகள் வாங்குவது மட்டும் சிறப்பல்ல இன்று நமது இயலுமைக்கு அமைய உபயோகமான மங்களகரமான பொருள்கள் எவையாயினும் வங்கலாம். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், புதிய தொழில் தொடங்க கருவிகள் போன்றவையும் வாங்கலாம்.
  3. கல்வி தொடங்குதல் இந்நாளில் ஆரம்பிக்கலாம்.
  4. புது கணக்கு ஆரம்பிக்கலாம்.
  5. இன்று வங்கி கணக்கு ஆரம்பிக்கலாம்.



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக